கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளின் கீழ் அனுமதிப்பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட இரு ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் நேற்றிரவு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு, சீதுவ பொலிஸ் பிரிவு ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளின் கீழ் அனுமதிப்பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையங்களே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த இவ்விரு மசாஜ் நிலையங்களை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த 8 பெண்கள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



















