இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அமைச்சரவை அமைச்சர் ஒருவர் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் கண்டறியப்பட்ட புதிய தொற்றாளர்களில் மூன்றில் ஒரு பங்கு புதிய மாறுபாட்டை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஜனவரி மாதத்தில் பிரிட்டன் ஒரு புதிய கொவிட் அலையை எதிர்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடு இங்கிலாந்தில் எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரை அடுத்த ஐந்து மாதங்களில் 25,000 முதல் 75,000 கொவிட் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




















