யுாழ்.தொண்டைமானாறு, சின்னமலை ஏற்றப்பகுதியில் இன்று மாலை உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மனித கால்களின் எலும்புக்கூடு மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் வடமராட்சி கடற்கரையில் மீட்கப்பட்ட உருக்குலைந்த மனித உடல்கள் மூன்றுடன் இந்த மனித எச்சமும் வைக்கப்பட்டுள்ளன.



















