பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. ஒரு பக்கம் Omicron மற்றொரு பக்கம் கொரோனா என்ற விதத்தில் மக்களை துன்புறுத்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்று மட்டும் பிரித்தானியாவில் சுமார் 88,376 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Omicron வைரஸ் உலகின் மிகப்பெரிய எதிரி என்றும் பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இன்று பிரித்தானியாவை தாக்கியுள்ள Omicron நாளை பல உலக நாடுகளை தாக்கும் என்றும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சுமார் 67 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரிட்டனில் தற்போது நோய் தொற்று 11 மில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளது.
இதற்கு Omicron மாறுபாடு தான் முக்கிய காரணம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, மக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூட வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.