உடல் ஆரோக்கியத்துக்கு வலு கொடுக்கும் சத்து கஞ்சி தயாரிப்பில் அமுக்கராங்கிழங்கு பொடி சேர்த்து குடித்து வந்தால் இழந்த இளமை மீண்டும் திரும்பும்.
நரம்புத்தளர்ச்சி என்பது நரம்புகள் தளர்வதை குறிப்பிடுவது அல்ல. அதாவது, மூளையில் இருந்து கட்டளைகளை உறுப்புகளுக்கு எடுத்துச் செல்பவை நரம்புகள்.
மயலின் என்னும் வேதிப்பொருள் சூழந்த லட்சக்கணக்கான சின்னச் சின்ன நரம்புகள், பெரிய நரம்பாக தசைகளில் ஊடுருவி இருக்கும். இவை மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதில் தொய்வு உண்டானால், அதைத்தான் நரம்புத்தளர்ச்சி என்கிறோம்.
இந்த பிரச்சினை இருப்பவர்கள் அமுக்கராங்கிழங்கை கொண்டு சரிசெய்து கொள்ளலாம்.
காலை, மாலை வேளையில் காபி, டீக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் அமுக்கராங்கிழங்கு பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் இந்த பிரச்சினை குறையும். உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.
அனைத்து வயதினருக்கும் உடலுக்கு வலுகொடுக்க அமுக்கராங்கிழங்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடியை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் போகும். உடல் சருமம் பொலிவு அடையும். ஆயுள் நீடிக்கும். வளரும் பிள்ளைகளுக்கு 2 சிட்டிகை அளவுக்கு நெய்யில் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அரை டீஸ்பூன் அளவு நெய்யில் குழைத்து சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
வளரும் பிள்ளைகளுக்கு தேனில் கலந்து கொடுத்தால் பசியின்மை பிரச்சினை குறையும்.
உடல் ஆரோக்கியத்துக்கு வலு கொடுக்கும் சத்து கஞ்சி தயாரிப்பில் அமுக்கராங்கிழங்கு பொடி சேர்த்து குடித்து வந்தால் இழந்த இளமை மீண்டும் திரும்பும். ஆண்களுக்கு பிரத்யேகமான அமுக்கராங்சூரண தயாரிப்பும் உண்டு.
அமுக்கராங்கிழங்குதான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது, மன அழுத்தம் நீக்கும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவத்திலும் குறிப்பிடப்படுகிறது.