கொள்வனவு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வழக்கமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய 90 நாட்கள் ஆகும், ஆனால் கடந்த நாட்களில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியால் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள கச்சா எண்ணெய் ஜனவரி 25ஆம் திகதிக்குள் நாட்டை வந்து சேரும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கச்சா எண்ணெய் இலங்கைக்கு வரும் வரை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.