சீனாவின் மிக அதிக வயதான பெண் என்று கருதப்பட்ட 135 வயதான அலிமிஹான் செயிட்டி Alimihan Seyiti நேற்று காலமானார்.
சீனாவின் காஷ்கர் மாகாணத்திலுள்ள ஷூல் மாவட்டம், கோமுஜெரிக் கிராமத்தைச் சேர்ந்த அலிமிஹான் செயிட்டி 1886-ம் ஆண்டு ஜூன் 25-ம் திகதி பிறந்துள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு சீனாவின் முதுமையியல் மற்றும் முதியோர் மருத்துவ சங்கம் வெளியிட்ட முதியவர்கள் பட்டியலில் அலிமிஹான் செயிட்டி முதலிடம் பெற்றிருந்தார்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை மரணமான செயிட்டி, தனது வாழ்நாள் முழுவதும் எளிமையான, வாழ்க்கை முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்துக்கு உணவு சாப்பிட்டு, வீட்டின் முற்றத்தில் நின்றவாறு சூரிய ஒளியைப் பெறுவதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.