ஈழத்தமிழர்களின் இரத்தத்தினால் எழுதப்பட்ட உடன்படிக்கையே இலங்கை,இந்திய உடன்படிக்கை.
இருப்பினும் அந்த உடன்படிக்கையில் ஈழத்தமிழர்கள் ஒரு பொருட்டல்ல என அரசியல் விமர்சகர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதோடு இந்திய மத்தியஸ்திற்கு வரையறை வந்தது.இதன்போதே புலம்பெயர் தமிழ்ச்சமூகம் பலமாக மேலெழுந்தது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எனவே தமிழ் மக்களின் ஆயுத போராட்டம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பின்புலத்தோடு மேற்கை நோக்கி திரும்பியது.
எனவே 1990 களில் தொடங்கிய இந்த மாற்றம் 2000 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரனையோடு சமாதானத்திற்கு வந்தது.இந்த சமாதானத்தின் விளைவில் 4ஆம் கட்ட ஈழப்போர் வெடித்தது.
இந்த சமாதான முயற்சிகளில் முக்கிய அம்சமாக இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதினை அது ஏற்றுக்கொள்கின்றது.
அதாவது ரணில் ,பிரபாகரன் உடன்படிக்கை இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதினை ஏற்றுக்கொள்கின்றது.
ஆனால் இந்த அதிகார மையங்கள் சமமானவையல்ல என்பதினை வொசிங்டன் மாநாட்டிற்கு விடுதலைப்புலிகள் செல்வதற்கு மறுக்கப்பட்ட போதே தெரியவந்துள்ளது.இதுவும் சமாதானம் கிடைக்கவொரு காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.