ஒமிக்ரோன் வைரஸ் தொற்று 89 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றது.
இந்நிலையில்,தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமிக்ரோன் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகையை விட ஒன்றரை நாள் முதல் 3 நாளில் ஒமிக்ரோன் வைரஸ் இரு மடங்காக அதிகமாக பரவுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.