கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை, வண்ணத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவ்வாறு மணல் ஏற்றிகொண்டிருந்த நால்வரை கைது செய்து அவர்களது உழவியந்திரங்களையும், அவர்களையும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.