மெக்சிகோவில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு அந்நாட்டு குடியேற்றத்துறை மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கியுள்தாக கூறப்படுகின்றது.
தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள குடியேற்றத்துறை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில், அவர்களில் பலருக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெக்சிகோவிலேயே அவர்கள் வேலை தேடிக்கொண்டு நிரந்தரமாக தங்கலாம் என அவர்களுக்கு உதவிய உள்ளூர் தன்னார்வலர் இரினியோ முஜிகா என்பவர் தெரிவித்தார்.
அண்டை நாடுகளை சேர்ந்த மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சமடையும் நோக்கில் அந்நாட்டுக்கு அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் தற்போது தங்களுக்கு விசா கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக விசா பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.