அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகிறது.
புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கு அவசியமான சீருடை எதிர்வரும் 31ஆம் திகதி மாணவர்களில் 60 வீதமானோருக்கு வழங்கப்படவுள்ளது.
மேலதிக 40 வீதமான சீருடைகள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் ஜனவரி மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நான்கு உள்ளூர் வர்த்தகர்களால் சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், அவர்களது சீருடைகள் வலயப் பணிப்பாளர்களால் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்