கொழும்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுகள் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிறிமசிறி தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பு இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதாகவும் இந்தியாவின் வடபகுதியில் இருந்து வறண்ட காற்று வீசி வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தியாவின் வடபகுதியில் வீசும் வறண்ட காற்றில் நீராவி இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். வானத்தில் மேகமூட்டம் குறைவாகவும், வெப்பம் அதிகமாகவும் காணப்படுவதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மழை குறைந்து காணப்படுவதால் காலை நேரங்களில் நாடு முழுவதும் குளிரான காலநிலை நிலவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.