பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, தடுப்பூசி போட்ட ஆதராத்தை காட்டுபவர்களை மட்டுமே உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய அனுதிக்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என தெரியவந்துள்ளது.
பிரான்சில் புத்தாண்டிற்குள் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என சுகாதார அமைச்சர் எச்சத்திருந்த நிலையில் புதிய சட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாம்.
பிரான்சில் தற்போது இருக்கும் விதியின் படி, பார்கள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல இடங்களுக்குள் நுழைய மக்கள் ஹெல்த் பாஸை காட்ட வேண்டும்.
தடுப்பூசி சான்றிதழ், தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவு அல்லது சமீபத்தில் தொற்றிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் இவை அனைத்தும் ஹெல்த் பாஸாக அங்கீகரிக்கப்பட்டது.
தற்போது பிரான்ஸ் அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள புதிய விதியின் படி, தடுப்பூசி சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏற்கனவே இரவு விடுதிகளை மூடியுள்ள பிரான்ஸ் அரசு, புத்தாண்டு வானவேடிக்கை காட்சிகளையும் ரத்து செய்துள்ளது.