ஒமிக்ரான மாறுபாடு பரவல் காரணமாக சிங்கப்பூரில் டிசம்பர் 23ம் திகதி முதல் புதிய விதி அமுலுக்கு வருகிறது.
தனிமைப்படுத்தல் இல்லாத பயண திட்டத்தின் கீழ் விற்கப்படும் விமானம் மற்றும் பேருந்து டிக்கெட் விநியோகத்தை நிறுத்துவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி போட்ட பயண வழி (VTL) திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு சிங்கப்பூர் அனுமதியளித்தது.
இந்த திட்டத்தில் பட்டியலிடப்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்க அடங்கும்.
டிசம்பர் 23ம் திகதி முதல் இந்த நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வர விரும்பும் மக்களுக்காக புதிய டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படாது என புதன்கிழமை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
டிசம்பவர் 23ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய வதி 2022 ஜனவரி 20ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
விமானங்கள் அல்லது பேருந்துகளில் ஏற்கனவே VTL திட்டத்தின் கீழ் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், பிற தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் பயணம் செய்யலாம் என அரசு அறிவத்துள்ளது.
எங்கள் எல்லை நடவடிக்கைகள், ஒமிக்ரான் மாறுபாடு குறித்து அறிய உதவும் மற்றும் எங்கள் பாதுகாப்பை பலப்படுத்த உதவும்.
2022 ஜனவரி 20க்குப் பிறகு VTL ஒதுக்கீடுகள் மற்றும் பயணச்சீட்டு விற்பனையைக் குறைக்கப்படும். விமானங்களுக்கு, VTL டிக்கெட்டுகளின் மொத்த எண்ணிக்கையானது முன்பு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் 50% ஆகக் குறைக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.