நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரது திருமணம் 2019ல் நடந்து முடிந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. ஆர்யா எப்போதும் பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் செலுத்துபவர். எப்போது ஒர்கவுட், சைக்கிளிங் என அவர் அதிகமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தான் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
சாயிஷாவும் ஆர்யாவின் ரூட்டை தான் பின்பற்றி வருகிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகமாகிவிட்ட நிலையில் அதை அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து குறைத்திருக்கிறார். அது அவ்ளோ ஈஸி இல்லை என சாயிஷா பதிவிட்டு இருக்கிறார்.
சாயிஷா கூறி இருப்பதாவது..
“எடையை குறைப்பது அவ்ளோ சுலபம் அல்ல, குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு. இருப்பினும் நீங்கள் சீரான வேகத்தில் உறுதியுடன் இருந்தால் கண்டிப்பாக அதிகபடியான எடையை குறைக்கலாம். எட்டமுடியாத கோல் வைக்க கூடாது. எல்லா பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான். ஒல்லியாக இருப்பது நமது பாகங்கள் மீது visceral fat சேராமல் இருக்க உதவும்.”
“ஒரு celebrityயை பார்த்துவிட்டு நீங்க கோல் செட் பண்ணாதீங்க. ஒவ்வொருவருக்கும் வேறு விதமான உடல் இருக்கும். இந்த போட்டோ எனக்கு பிட்னெஸ் தான் லைப்ஸ்டைல் என காட்டுவதற்காக தான். அது தான் என்னை மகிழ்ச்சி ஆக்குகிறது” என சாயிஷா குறிப்பிட்டு இருக்கிறார்.
View this post on Instagram