நட்ஸ் ஒரு ஆரோக்கியமாக உணவு. அளவில் சிறியவையாக இருந்தாலும் இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமே.
பாதாம், அக்ரூட் பருப்புகள், பைன் நட்ஸ், ஹேசல்நட்ஸ், முந்திரி போன்றவற்றை போலவே பிஸ்தா பருப்பும் பல்வேறு நன்மைகளை கொண்டது.
ஆனால் இவற்றை குளிர் காலத்தில் சாப்பிடலாமா என்பது மிகப் பெரிய கேள்வியாக எம்மில் இருக்கின்றது.
வைட்டமின் B6, துத்தநாகம், தாமிரம், இரும்பு, செலினியம், ஃபோலேட், பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவ கூடிய பல ஊட்டச்சத்துக்களை பிஸ்தாக்கள் வழங்குவதால் குளிர்காலத்தில் பிஸ்தாவை சிற்றுண்டியாக எடுத்து கொள்வது சிறந்த பலன்களை தரும்.
இதனால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் தான் கிடைக்கின்றது. எனவே அச்சப்பட தேவையில்லை.
மழைக்காலம் முடிந்து குளிர்காலம் துவங்கி இருக்கும் நிலையில் பிஸ்தா போன்ற சத்தான பொருட்களை டயட்டில் சேர்ப்பது நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட தேவையான முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்களை நம் உடலுக்கு அதிக அளவில் வழங்க உதவும்.
இந்த அற்புதமான பிஸ்தாக்களில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குறிப்பாக லுடீன் நம் கண் பார்வைக்கு சிறந்த பலனை தரும்.
பிஸ்தாக்களில் நிறைந்துள்ள பி6 பைரிடாக்சின் மாதவிடாய்க்கு முந்தைய வயிற்று பிடிப்பு பிரச்சனைகளுக்கு தீர்வாக சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது.
பிஸ்தாக்கள் கொலஸ்ட்ரால் இல்லாதவை மற்றும், நார்ச்சத்து நிறைந்தவை.
நம் குடல் பாக்டீரியாக்களுக்கு சிறந்தது மற்றும் மிக முக்கியமாக ஆரோக்கியமான புரத சிற்றுண்டி.