சுவிஸில் 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 6,297 பேர் பாதிக்கப்பட்டதோடு 06 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 12 இலட்சத்து 21 ஆயிரத்து 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12 ஆயிரத்து 091 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 58 ஆயிரத்து 242 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 302 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் 9,116 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 9 இலட்சத்து 51 ஆயிரத்து 091 பேர் குணமடைந்துள்ளனர்.