மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கல்கிரியாகம பகுதியில் வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞர் கல்கிரியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
21 வயதுடைய உல்பதகம பகுதியைச் சேர்ந்நதவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் சிலருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையைத் தொடர்ந்து கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில் யானைக்காகப் போடப்பட்டிருக்கும் மின்சார வேலி குறித்த நபரின் மீது விழுந்தமையினாலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.