கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடியான வர்த்தகர்கள் காலாவதியான பொருட்களை பாவனைக்கு உபயோகமற்ற மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பயனற்ற பொருட்கள் மோசடியான முறையில் விற்பனை செய்வதுடன் போலி நாணயத்தாள்களும் சந்தையில் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் பண்டிகைக் காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதில் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் பேச்சாளர் நிஹால் ஜயசேகர தெரிவித்துள்ளார்