விஜய் டிவியின் பிக் பாஸ் 5 ஷோ தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முந்தைய சீசன்களை போலவே தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று தாமரையின் மகன் வந்திருந்தது முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோவில் அவரது கணவர் வந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.
அதில் கணவர் தாமரைக்கு அட்வைஸ் கூறி இருக்கிறார். “தயவு செஞ்சு கோபப்படாதே” என அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு தாமரைக்கு அவர் தலையில் பூ வைத்து விட்டிருக்கிறார்.