கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடர் மூலம் ஜோடியாக நடித்தவர்கள் சித்து-ஸ்ரேயா. முதல் தொடரிலேயே இருவரின் ஜோடி செமயாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அந்த தொடர் முடிவுக்கு வர சித்து விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடிக்க கமிட்டானார். சீரியலும் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, தற்போதைய எபிசோடில் சமையல் போட்டியில் சரவணன் ஜெயிப்பாரா இல்லையா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளார்கள்.
அதேபோல் ஸ்ரேயா பிரஜன் நடித்துவந்த அன்புடன் குஷி தொடரில் அவருக்கு ஜோடியாக 2 நாயகிகளின் மாற்றத்திற்கு பிறகு நடித்து வந்தார், அந்த தொடரும் முடிந்துவிட்டது.
பின் சித்து-ஸ்ரேயா இருவரும் காதலித்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள்.
இப்போது ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரஜினி தொடரில் நடித்து வருகிறார்.
இருவரும் ஒரு யூடியூப் பக்கத்தை வைத்துள்ளார்கள், அதில் ஸ்ரேயா பிறந்தநாள் கொண்டாட்டம் பதிவு செய்துள்ளார். தனது ஆசை மனைவியின் பிறந்தநாளுக்கு சித்து ஒரு கார் பரிசளித்துள்ளார்.
அவர்களது ரசிகர்கள் மத்தியில் வீடியோ வைரலாகி வருகிறது.