மியான்மாரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து 30 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன் சேவ் தி சில்ரன் அமைப்பின் ஊழியர்கள் இருவருவரை காணவில்லையென என்று சர்வதேச தொண்டு நிறுவனமான சேவ் தி சில்ரன் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதல் குறித்து சேவ் தி சில்ட்ரன் தனது அறிக்கையில் தாக்குதலுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
“மியான்மார் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் அர்ப்பணிப்புள்ள மனிதாபிமானமுள்ள எங்கள் ஊழியர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறையால் நாங்கள் அதிப்தியடைகின்றோம்” என்று சேவ் தி சில்ட்ரன்ஸ் தலைமை நிர்வாகி இங்கர் ஆஷிங் தெரிவித்துள்ளார்.
“மனிதாபிமானப் பணி முடிந்து விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்ற இரண்டு ஊழியர்கள் சம்பவத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர். அவர்களின் தனியார் வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டது என்பது எங்களிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதலின் பின்விளைவுகளைக் காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன, அதில் வாகனங்களின் எரிந்த எச்சங்கள் தெரியவந்துள்ளன.
“இறந்த உடல்கள் அனைத்தும் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட வெவ்வேறு அளவுகளில் இருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்”
மேலும் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும், சர்வதேச தொண்டு நிறுவனமான சேவ் தி சில்ரன் தெரிவித்துள்ளது.