இலங்கை அடுத்த ஆண்டு கடுமையான மின்சார விநியோக தடங்கலை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது திட்டமிட்ட மின்சார விநியோக தடைகளை நாடு சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
மின்சார உற்பத்திக்கான உலை எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்வதற்கான டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தநிலையில் நுரைச்சோலை அனல் மின்சார மையத்தின் பழதுப் பார்த்தல் செயற்பாடுகள் இன்னும் முடிவடையவில்லை.
இந்த பழுதுப்பார்த்தலுக்காக சீனாவின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார மைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனவே ஜனவாி மாதத்தில் பெரும்பாலும் இரவு நேரங்களில் மின்சார விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபையின் தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.