மலேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன்,தாழ்வான பகுதிகளில் இருந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதுடன்,5 பேர் மாயமாகியுள்ளனர்.



















