கொழும்பில் பல பகுதிகளி நீர் விநியோகம் 12 மணித்தியாலங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, கடுவெல, கோட்டே, தெஹிவளை மற்றும் கல்கிசை நகர சபைக்குட்பட்ட பகுதி, மஹரகம , பொரலஸ்கமுவ, கொட்டிகாவத்தை, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதி மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு (26) இரவு 9 மணியளவில் முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நீர் விநியோக தடையானது, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.




















