பிரான்ஸ் நாட்டில் தினசரி கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது.
சில தினங்களாக 90 ஆயிரத்தினை ஒட்டி பதிவாகி வந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இதுவரையில் 91 இலட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு இலட்சத்து 22 ஆயிரம் கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.