இலங்கையர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளை திருமணம் செய்வது குறித்த கட்டுப்பாட்டுக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டினால் தனது சொந்தப்பிள்ளைகள் பாதிக்கப்படுவதனை விரும்பவில்லை என தெரிவித்து சட்டத்தரணி திஸியா வாராகொட இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இலங்கையர் ஒருவரின் வாழ்க்கைத் துணை தொடர்பில் பிரச்சினை இருந்தால் அவரை நாட்டுக்கு அனுமதிப்பதனை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையர் ஒருவர் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதனை அதிகாரிகள் நிர்ணயம் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்ற தாக்கல் செய்வதா அல்லது வேறும் நடவடிக்கைகள் எடுப்பதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவாளர் நாயகம் எம்.பி. வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் சஞ்சீவ முணசிங்க ஆகியோருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.