உலகின் பல நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பயன்படுத்தும் வாகனங்கள் 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் விலை குறையக்கூடும் என Cox Automotive நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை மேலும் உயரலாம் என சுட்டிக்காட்டியுள்ளது.
கார் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தியதால் புதிய காரின் விலையும் உயர்ந்துள்ளது.
புதிய கார் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக Cox Automotive நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.