வாழைப்பழம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டும்.
குறிப்பாக சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழத்தினை தொடக் கூட கூாடது. ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ மொழியில் சைனசிடிஸ் என்று அழைக்கப்படும் பிரச்சனை தான் சைனஸ் பிரச்சனை என்று மக்களால் பொதுவாக அழைக்கப்படுகிறது.
இந்த பிரச்சனையில், நோயாளியின் நாசி எலும்பு அதிகப்படியான குளிர்ச்சியின் காரணமாக பெரிதாகிறது.
குளிர்ச்சியான உணவுகள் அல்லது விஷயங்களைத் தவிர்த்தால், இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும்.
ஆனால் நீண்ட காலமாக இப்பிரச்சனை உள்ளவர்கள் மூக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
இதுப்போன்ற ஆரோக்கிய பிரச்சனை இல்லாதவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் வாழைப்பழத்தை அளவாக சாப்பிட்டால் தான் அவற்றின் நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பொதுவாக குளிர் காலத்தில் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.




















