தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார்.
அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அத்துடன் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலில் ஓ சொல்றியா பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. அதன்படி இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வேற லெவலில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram



















