கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முதியோர் காப்பகத்தின் வெளியே ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
கியூபெக் மாகாணத்தின் Laval நகரத்தில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தின் வெளியே குறித்த 88 வயதான நபர் பனியில் சலனமற்று காணப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை சுமார் 3 மணியளவில் பொலிசாருக்கு இது தொடர்பில் தகவல் சென்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் கண்விழித்த அந்த முதியவரின் மனைவி, தமக்கு அருகே படுத்திருந்தவரை காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமார் 10 மணியளவிலேயே குறித்த முதியவர் படுக்கைக்கு சென்றுள்ளார். இதனிடையே, குறித்த நபரை அந்த முதியோர் காப்பக ஊழியர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே முதியோர் காப்பகத்திற்கு வெளியே, பனியில் சலனமற்ற நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடன்மடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நபர் மரணமடைந்துள்ளதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், அவரது மரண காரணம் தொடர்பில் உறுதியான தகவல் இல்லை எனவும், உரிய சோதனைக்கு பின்னரே தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.க்