யாழ்ப்பாணம் – கோப்பாய் – கோண்டாவில் வீதியில் பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு நேற்று மாலை திடீரென ஏற்பட்ட சோர்வு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு மணி நேரத்தில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்பே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.