பிரித்தானியாவில், கிறிஸ்துமஸ் சமூக கூட்டங்கள் மீது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததைத் தொடர்ந்து, தொற்று பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 162,572 புதிய தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், பிரித்தானியாவில் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், கோவிட் குறித்த அச்சம் அங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக , பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் மீண்டும் முழுநேரமும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகின்றனர். இடைநிலைப் பள்ளிகளுக்கு பருவம் துவங்கி ஜனவரி 26ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் கொண்டு வரப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது, அதிகபட்ச நேரத்திற்கு பள்ளியில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கல்வித் துறை நம்புகிறது. 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு பகுதிகளில் முகக்கவசத்தை அணிவது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது,
மேலும் பல ஆசிரியர்கள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். எனினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டிலும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மட்டுமே இந்த பரிந்துரைகள் இருக்கும் என்று அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்.
அதன் பிறகு ‘Plan B’ விதிமுறைகள் காலாவதியாகும். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரித் தலைவர்கள் சங்கத்தின் (ASCL) பொதுச் செயலர் Geoff Barton, வகுப்பறைகளில் தொற்று பரவுவதைக் குறைக்க, முடிந்த அனைத்தையும் செய்வது முற்றிலும் அவசியம் என்று வலியுறுத்தினார்.