பிரான்சில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மோசமான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் விதத்தில் சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்த மேக்ரான், ஆங்கிலத்தில் சற்று மோசமான அர்த்தம் கொண்ட ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்.
நான்கு மாதங்களில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், உடனடியாக மேக்ரானின் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சியினர், ஒரு ஜனாதிபதியாக இருப்பவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்க ஒன்று திரண்டுள்ளார்கள்.
கடந்த ஆண்டு, சுகாதார பாஸ் ஒன்றை அறிமுகம் செய்த பிரான்ஸ் அரசு, பிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்று நிரூபிக்காதவர்கள், உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல தடை விதித்தது.