அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாப்படுபவர் நடிகை சினேகா.
நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு தற்போது இரு பிள்ளைகளுக்கு தாய்யாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில், இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை சினேகா சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை சினேகாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே 40 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.




















