உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு கடன் வழங்கும் நடைமுறைகள் தொடர்பில் சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது,
சீனாவிடம் கடனைப் பெற்ற நாடுகள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் தவிப்பதாகவும், இதன்போது சீன அரசாங்கத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
எனினும் சீனா இதனை நிராகரிக்கிறது. மேற்கு நாடுகள், தமது செல்வாக்கை கெடுக்கும் வகையில் இந்தக்குற்றச்சாட்டை சுமத்துவதாக சீனா கூறுகிறது.
எந்தவொரு நாடும், தம்மிடம் பெற்ற கடன் காரணமாக கடன்பொறிக்குள் சிக்கவில்லை என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கடன் வழங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான அதன் கடன்கள் கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்து, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கடன் வழங்கல் $170bn டொலர்களை எட்டியது.
எவ்வாறாயினும், சீனாவின் ஒட்டுமொத்த கடன் பொறுப்புகள் இந்த புள்ளிவிபரங்கள் குறிப்பிடுவதை விட கணிசமாக அதிகமாக இருக்கும் என்று, அமெரிக்காவின் வில்லியம் & மேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச மேம்பாட்டு அமைப்பான AidData தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் கடனில் பாதி உத்தியோகபூர்வ கடன் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்படவில்லை என்பதை அந்த பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
இது பெரும்பாலும் அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு நேரடியாக இல்லாமல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், கூட்டு முயற்சிகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
சீனாவின் கடன் தொடர்பில் AidData நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இப்போது 40க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு சீனா கடன்களை வழங்குகிறது. ஜிபூட்டி, லாவோஸ், சாம்பியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள், தமது வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 20% க்கு சமமாக தொகையை சீனாவுடனான கடன்களாகக் கொண்டுள்ளன.
இறுதியாக, 2017 ஆம் ஆண்டில், மேலும் சீன முதலீட்டுக்கு ஈடாக, துறைமுகத்தில் 70% கட்டுப்பாட்டில் உள்ள சீன வணிகர்களுக்கு துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வழங்க இலங்கை இணக்கம் வெளியிட்டது.
இதேவேளை லண்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸ் (Chatham House)துறைமுகத் திட்டத்தைப் பற்றிய பகுப்பாய்வு, “கடன் பொறி” விபரிப்பு கண்டிப்பாகப் பொருந்துமா என்று கேள்வி எழுப்பியுள்ளது,
இலங்கையின் துறைமுகத்தில் இருந்து இராணுவ நன்மைகளைப் பெறுவதற்கு சீனா தனது நிலையைப் பயன்படுத்திக் கொண்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் லண்டனின் மதிப்பீட்டு நிறுவனமான ”சாதம் ஹவுஸ்” சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை ஆய்வு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கடன் ஏற்பாடுகளில், சீன அரசுக்குச் சொந்தமான கடன் வழங்குநர்கள் கடன் செலுத்தத் தவறினால், நாடுகளின் சொத்தை சீனா கைப்பற்றிய வரலாறுகள் எதுவும் இல்லை என்று AidData குறிப்பிட்டுள்ளது.
மேலும் சீனாவின் வளர்ச்சிக்கான நிதியுதவியானது அடிப்படையில் ஒரு வணிக நடவடிக்கையாகும்.” சீனா மேற்கத்திய அரசாங்கங்களை விட அதிக வட்டி விகிதத்தில், நாடுகளுக்கு கடன் கொடுக்க முனைகிறது.
ஏறக்குறைய 4% கடன்கள், உலக வங்கி அல்லது பிரான்ஸ் அல்லது ஜெர்மனி போன்ற தனிப்பட்ட நாடுகளின் வழக்கமான கடனை விட நான்கு மடங்கு அதிகம்.
ஒரு சீனக் கடனுக்குத் தேவையான திருப்பிச் செலுத்தும் காலம் பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் குறைவானது,
ஏனைய நாடுகள், சலுகைக் கடன்கள் 28 வருடங்களில் திருப்பிச்செலுத்தும் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.