15 கோடி பெறுமதியான சொத்துக்களை வத்தளை வாழ் இந்து தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கியவரும், கொழும்பு வத்தளை இந்துக் கல்லூரியின் நன்கொடையாளரும், சமூக ஆர்வளருமான மயில்வாகனம் மாணிக்கவாசகம் காலமாகினார்.
தனது 84ஆவது வயதில் நேற்று (5) அதிகாலை அவர் காலமானார்.
மயில்வாகனம் மாணிக்கவாசகம் McSons Organic (Pvt) Ltd எனும் நிறுவனத்தை ஆரம்பித்து ”காவடி மார்க்” எனும் வியாபார குறி உள்நாட்டு சந்தையிலும் வெளிநாட்டு சந்தையிலும் இன்றும் வாடிக்கையாளர்கள் மத்தில் சிறந்த நன்மதிப்பை பெற்றுக் காணப்படும் நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல.51 லொறிஸ் றோட் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் (08.01.2022) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.