கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில், தற்போது 2-வது முறையாக அவரை வைரஸ் தொற்றியுள்ளது.
போலந்து நாட்டின் அதிபர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரெஜ் துடா கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. எனினும் அவருக்கு வைரஸ் தொற்றுக்கான எந்த வித அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண்ட்ரெஜ் துடா கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில், தற்போது 2-வது முறையாக அவரை வைரஸ் தொற்றியுள்ளது.
49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் உதவியாளர் பாவெல் ஸ்ரோட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்ட ஆண்ட்ரெஜ் துடா, கடந்த மாதம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.