லண்டன் ஹரோவில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இலங்கை ஊழியர் ஒருவர் திருடனுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையர் பணியாற்றும் லண்டன் சுப்பர் மார்க்கெட்டில் கொள்ளையரின் திருட்டு நடவடிக்கையை தனி நபராக தடுத்துள்ளார்.
குறித்த சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைன் போத்தல்கள், கோப்பி போத்தல்கள் மற்றும் மேலும் சில பொருட்களை பையில் வைத்துக் கொண்டு இரகசியமாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
இந்த விடயத்தை அங்கு பணியாற்றிய இலங்கையரான சுகீஷ்வர வேகடபொல என்பவர் அவதானித்துள்ளார். குறித்த கொள்ளையர் அந்த பிரதேச வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து பொருட்கள் திருடும் நபர் என்பதனை இலங்கையர் அவதானித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த கொள்ளையரின் செயற்பாட்டை CCTV கமரா ஊடாக கண்கானித்துள்ள சுகீஷ்வர இந்த பொருட்களை வெளியே கொண்டு செல்ல விடாமல் தடுத்துள்ளார்.
கொள்ளையரின் கையில் இருந்த பையை பறிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் பொருட்களை திருடிய நபர் தனது பையை சுப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே கொண்டு சென்ற போதிலும் இலங்கையர் பையை கைவிடாமல் அடிதடியில் ஈடுபட்டுள்ளார்.
தனிநபராக இறுதி வரை போராடிய சுகீஷ்வர பையை பறித்து எடுத்துள்ளார். பாரிய போராட்டத்தின் பின்னர் கடையில் இருந்து திருடப்பட்ட பொருட்களை இலங்கை இளைஞன் மீட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.