சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது.
இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தைக் கட்டமைக்க 2 மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தினுள் 18 மீட்டர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாரதிகளின் சோர்வைப் போக்கும் வகையில் வண்ணமயமான LED விளக்குகளும் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.