குழந்தை பருவத்தில் ஏற்படும் எல்லா நீரிழிவு குறைபாடும் டைப் 1 (type 1) அல்ல. சில உடல் பருமனால் பெரியவர்களுக்கு ஏற்படும் டைப் 2 (type 2) எனப்படும் முதிர் வயது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக மோனோஜெனிக் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகவும் குறைவு. காரணம் மோனோ ஜெனிக் நீரிழிவு நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்து பார்ப்பதில்லை. எனவே குறிப்பாக குழந்தை பருவத்தில் சக்கரை நோய் ஏற்பட்டாலே அதனை டைப் 1 (type 1) என வகைப்படுத்தி, இது கணையத்தின் இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் குறைபாடாக இருப்பதனால், இன்சுலின் ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இன்சுலின் ஊசி உணவு உண்ணுவதை பொறுத்து எடுத்து கொள்ள வேண்டியது இருப்பதால், ஒரு நாளைக்கு பல முறை ஊசி எடுக்க வேண்டியது வரலாம். இதனை அக்குழந்தைகள் ஏற்றுக்கொண்டாலும், பெற்றோருக்கு ஏற்றுக்கொள்ள இது சற்றே கடினமாகத்தான் இருக்கிறது.
ஆனால் குழந்தை பருவத்தில் ஏற்படும் எல்லா நீரிழிவு குறைபாடும் டைப் 1 (type 1) அல்ல. சில உடல் பருமனால் பெரியவர்களுக்கு ஏற்படும் டைப் 2 (type 2) எனப்படும் முதிர் வயது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
வேறு சில மோனோஜெனிக் வகை நீரிழிவு நோயாக கூட இருக்கக்கூடும். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இவ்வகை சக்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி தேவை இல்லை. சாதாரண நீரிழிவு மாத்திரைகளே போதுமானது. இந்த வகை நீரிழிவு நோயை மரபணு பரிசோதனை செய்து நாம் அறிந்துகொள்ளலாம் .இதனை கண்டுபிடித்து விட்டால் அக்குழந்தையை நாள்தோறும் எடுத்து கொள்ள வேண்டிய ஊசிகளிருந்து காப்பாற்றி விடலாம் .
Type 1 குழந்தைகளில் நூறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தினால் ஏற்படும், மாத்திரைக்கு கட்டுப்படும் நீரிழிவின் ஒரு வகையாக இருக்கக்கூடும் என்பதால், டைப் 1 நீரிழிவினால் அவதியுறும் குழந்தைகள் இம்மரபணு சோதனையை செய்துகொள்ள வேண்டுமா என ஒரு முறை ஆலோசனை செய்து கொள்ளலாம்.
மோனோ ஜெனிக் நீரிழிவு நோய் மிக குறைவான நபர்களுக்கே வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது அதனால் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் போது அவர்களின் நோய் டைப் 1 நீரிழிவு நோய் ஆகவே வகை படுத்திக்கொண்டு இன்சுலின் மருந்து ஊசியாக அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலை வரக்கூடிய காலகட்டங்களில் மேற்படி மோனோ ஜெனிக் நீரிழிவை கண்டுபிடிக்கும் செயலை செய்வதன் மூலமாக தவிர்க்க முடியும்.
இது டைப்-1 பாதிக்கப்படாமல் மோனோ ஜெனிக் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய சூழலில் பல்வேறு வகையான வைரஸ்களும் அதிக அளவில் பொதுமக்களை காய்ச்சல் இருமல் சளி உடல் வலி போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். உண்ணும் உணவு முதல் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் சிறிய அளவிற்கு அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவது முக்கியம்.
ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களும் தேவையான உடற்பயிற்சிகளும் எந்த நோயும் அணுகாமல் நம்மை காப்பாற்றும்.
ஒருவர் உண்ணும் உணவு வயிற்றில் ஜீரணம் ஆவதற்கு கணையத்தில் சுரக்கும் இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவை உண்ணும்போது நன்றாக ருசித்து ரசித்து நன்கு மென்று சாப்பிடும் பொழுது வாயில் போதுமான உமிழ்நீர் சுரக்கப்பட்டு நம் உணவு வயிற்றில் ஜீரணமாவதற்கு ஏற்றவகையில் செல்லும் இவ்வாறு உணவு பழக்கத்தை மேற்கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பயன் அளிக்கும் எனலாம்.