ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய அறிகுறியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒருவகை வறட்டு இருமல் என குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், பெற்றோர்கள் அதைக் கேட்கும் போது பயமுறுத்தப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
ஐந்து வயதுக்குட்பட்ட சில கொரோனா நோயாளிகளில் இதுபோன்ற வறட்டு இருமல் காணப்படுவதாக மருத்துவ நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தடுப்பூசிகளுக்கு இன்னும் தகுதி பெறாத இளம் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, அவர்களை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அருகாமையில் வைத்துக்கொள்வதே சிறந்தது என்றார் அவர்.
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை அமெரிக்காவை பொறுத்தமட்டில் 7.9 மில்லியன் சிறார்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிறார்களில் பாதிப்பு மிக லேசானதாகவே இதுவரை காணப்படு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.