நடிகர் சத்யராஜுக்கு கொரோனா உறுதியானதையடுத்து சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன.
3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சத்யராஜுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.