பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று புது புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.
அதில், நேரடியாக வெளியேற போகும் ஒரு நபரை போட்டியாளர்கள் அனைவரையும் பிக் பாஸ் தேர்வு செய்யும்படி கூறியுள்ளார்.
இதனால், பிக் பாஸ் வீட்டில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளுடன் பாவனி வெளியேற்றப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் வரும் பிக் பாஸ் படப்பிடிப்புகள் இன்று நடைபெறும். இதன் போது இந்த தகவல் உண்மையா என்பது தெரிந்து விடும்.
இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பாடத்தையும் படித்து விட்டு உள்ளே வந்த நிரூப் 2வது பைனஸிட்டாக நேற்று தெரிவு செய்யப்பட்டார். தாமரைக்கும் மக்கள் ஆதரவு அதிகமாகவுள்ளது.
முதல் இடத்தில் ராஜூவும், இரண்டாவது இடத்தினை தொகுப்பாளினி பிரியங்காவும் பெறுவார்கள் என்பது ரசிகர்களின் கணிப்பு. பார்க்கலாம் இன்னும் ஒரு வாரத்தில் பதில் கிடைத்து விடும்.