“அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாஸவே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அல்லது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகுவதற்கான சாத்தியம் உள்ளது எனக் கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சஜித் பிரேமதாஸவே எமது எதிர்க்கட்சித் தலைவர். நாம்தான் தற்போதைய நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைச் சவாலுக்குட்படுத்த முடியாது. அடுத்த ஜனாதிபதியும் அவர்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” எனப் பதிலளித்தார்.