இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் அவள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி அவர்களது திருமணம் இரண்டு முறை நடைபெற்றது.
திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில் எப்போதும் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தந்தை நாகர்ஜுனாவும் சேர்ந்து நடித்திருக்கும் பங்கராஜு திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்த நாக சைதன்யா அதில் சமந்தாவை பிரிந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில், “பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. அவர் (சமந்தா) மகிழ்ச்சியாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். அது போன்ற சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதன் முறையாக நடிகர் நாக சைதன்யா பேசியிருப்பது குறித்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.