இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்த நிலை தோன்றலாம் என்று மருந்து உற்பத்தி வழங்கல் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆர்.எம் சமன் குசும்சிறி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்ய வேண்டிய மருந்துகளின் முன்னுரிமைப் பட்டியலை தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 5 மில்லியன் டொலர் மதிப்புள்ள நான்கு மருந்துகளுக்கான நாணயக் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், அந்நிய செலாவணி நெருக்கடியை கருத்தில் கொண்டு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.