2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்குமுறைக்குள்ளாக்கியது,செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடந்த காலங்களில் மனித உரிமை விவகாரங்களில்ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றார்.
பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்றிவருகின்றார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. மனிதஉரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்குமுறைக்குள்ளாக்கியது, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது-ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது- யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சகாக்களிற்கு உறுதியளித்தபடி சட்டசீர்திருத்தங்களை நிறைவேற்ற தவறியுள்ளது- யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடந்தகாலத்தில் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பின்னடைவை ஏற்படுத்துவது குறித்தும் பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பது குறி;த்தும் உறுதியாகவுள்ளார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமர்சனங்களில் இருந்து தப்புவதற்காக நீதித்துறை சீர்திருத்தம் குறித்த வாக்குறுதிகளை வழங்கியுள்ள அதேவேளை அவரது அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அதிகரித்துள்ளது எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தம் குறித்த தனது சொந்த வாக்குறுதிகளை அலட்சியம் செய்துள்ள ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களை தொடர்ந்தும் இலக்குவைத்து வருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நீண்டகாலமாக துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகின்றது- மதசுதந்திரத்தை- சிறுபான்மை மக்களின் காணி சுதந்திரத்தை மீறுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்தவருடம் முழுவதும் இலங்கையின் படையினர் மனிதஉரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் – சட்டத்தரணிகள் கடந்தகாலங்களில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போன்றவர்களை துன்புறுத்தினார்கள் அச்சுறுத்தினார்கள் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டவர்களை ஒடுக்கினார்கள் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.