அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் திட்டத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாரியளவிலான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்தம் தடுப்பூசி தொடர்பான பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த விதிமுறைக்கெதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந் நிலையில், அமெரிக்க உயர் நீதிமன்றம் குறித்த விதிமுறையினை நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரத்தை மீறியுள்ளதாகவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது